யார்?
எனக்கு நீ யார்?
என் உயிர் சேர்ந்த உறவும் அல்ல
நீ யார்?
எனக்கு ...நீ யார்?
பிரபஞ்ச சூத்திரம் உரைத்த தகப்பன் சாமியாய்
போர் முகத்தில் பார்த்தனாய்
குசேலனை குபேரனாக்கிய கண்ணனாய்
யசோதை சீராட்டிய தேவகி நந்தனாய்
அர்ஜுனனுக்கு வாழ்வின் அர்த்தம் சொன்ன பரந்தாமனாய்
தாயாய் , தனயனாய், சேயாய்,
தோள் சாய்த்து ஆறுதல் சொல்லும் தோழனாய்
என் இனையாய் நடை போடும் நீ யார்?
எனக்கு நீ யார்?

No comments:
Post a Comment