Saturday, 29 September 2018

காத்திருப்பு


கை கோர்த்து
கண் பார்க்கும்
ஓரு நிமிஷம் ,
ஓராயிரம் வலி தாங்கும் பலம் தரும்!
எல்லாம் புதிதாகும்.
தவமெல்லாம் வரமாகும்!
வலிகள் எல்லாம் வெற்றியாகும்!- நீ
கண்களால் சிரிக்கும்
அந்த நொடிக்காக ...
காத்திருப்பேன் .
விரைவில் விடிந்து விடும்
வசந்த காலத்தின் வாசல் திறக்கும்
விழித்திரு ...என் கண்ணே .

Sunday, 1 April 2018

நீ என்ற நிசப்தம்



நீ அருகில் இல்லா நேரங்களின் நிசப்தம்
ஓசையாய் ஓங்காரமிட்டு
என்னை சுற்றிலும்
உடைந்து கிடக்கிறது.
ஒவ்வொரு துகளிலும் உன் முகம்.

நீ எனையழைக்கா தருணங்களின் சப்தம்
மெளனமாய் மண்டியிட்டு
என் பாதையெங்கும்
வளர்ந்து நிற்கிறது.
ஒவ்வொரு முள்ளும் ஒரு ரணம்.

Saturday, 17 March 2018

சக்தி

 இனி ...மார்பை பிய்த்தெறியவோ;
மதுரையை எறிக்கவோ போவதில்லை!
சிவம் வாழ வரம் தரும்
சக்தியாக உயிர்ப்பினும்,
சகதிகள் கடக்கும் போதும்;
நீசர்கள் நெருக்கும் போதும்;
நெற்றிக்கண் திறந்து,
நெருப்பை வாரியிறைக்கவும்,
சண்டாளர்களை சுட்டெறிக்கவும்,
கற்றுக் கொள் பெண்ணே. - நீ
அதி சக்தி!
ஆதி சக்தி !!!
கண்ணகியாக கண்ணீர் வேண்டாம்;
மாதவியாக மனம் குழையவும் வேண்டாம்;
கோபிகையாக கேளிக்கைகள் வேண்டாம்;
ராதிகையாக காத்திருக்கவும் வேண்டாம்;
அம்பிகைகள் வேண்டும்!
அகிலம் ஆள ஈஸ்வரிகள் மீள வேண்டும்!
அவனின்றி அணுவும் அசையாதெனின்,
அவளின்றி அவனும் அவனில்லை...ஆணில்லை!!!




Wednesday, 14 February 2018

.காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

ஆகாயம் எங்கும் சுற்றி...
உலகெல்லாம் அளந்து...
கண்டு...
கேட்டு...
கொண்டு...
கொடுத்து...
பழகி...
பயிண்று...
துளாவி...
துய்த்து...
களைத்து திரும்பும் நாளில்....
நீ வந்தடையும் கூடாக நான் (மட்டுமே)இருப்பேன்!
நம் சிறகுகளின் கதகதப்பில்...
காதல் மீண்டும் உயிர்க்கும் !
நேசத்தின் நினைவுகளுடன்...
காதலர் தின நல்வாழ்த்துக்கள்.